கடல் கோழி மீன் (பேத்தை மீன்) பற்றிய விளக்கம்

 

மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் வாழக்கூடிய ‘கடல் கோழி’ என்று அழைக்கப்படும் பேத்தை மீன் பற்றியே நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப்போகின்றோம்.

இந்த பேத்தை மீனானது மனிதர்களை போன்று பற்கள் உடையது, இதற்காக தான் இதன் விலங்கியல் பெயர் டெட்ராடான் என்று வைக்கப்பட்டுள்ளது, டெட்ராடான் என்பதற்கு லத்தீன் மொழியில் நான்கு பற்கள் என்று அர்த்தமாகும்.

கடல் கோழி மீன்

இந்த வகை மீனை பாம்பன் மீன் கம்பெனிகளில் தோல் நீக்கி சுத்தம் செய்து இதன் வயிற்று பகுதியில் இருக்கக்கூடிய கொடிய விஷமான டெட்ராடாக்ஸின் எடுத்து விட்டு சுத்தம் செய்து தூத்துக்குடிக்கு கிலோ 50 முதல் 70 வரையிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த மீன் கோழிகள் போன்று சுவை உடையதால் கடல்கோழி என்றழைக்கப்படுகிறது, பாம்பனில் இருந்து தூத்துக்குடிக்கும், அங்கிருந்து வெளிநாட்டிற்கு வான்வழி மற்றும் கடல்வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதன் இரு கண்கள் 360 டிகிரி சுற்றி பார்க்கும் தன்மை உடையது, குளிர் அதிகம் உள்ள பகுதிகளை விட மற்ற அனைத்து பகுதிகளில் இவை வாழ்கின்றன என்று கூறப்படுகிறது. தான் வாழும் இடத்திற்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையது.

 

உலகம் முழுவதும் 121 வகையான பேத்தை மீன் இருக்கின்றன, இதில் சில வகை இனப்பெருக்கத்திற்காக ஆறுகளிலும் வாழ்கின்றனவாம். இவை நீந்தும் விதம் மன்ற மீன்களைப் போல் இல்லாமல் மாறுபட்டு காணப்படும்.

கடல் கோழி மீன்

இதனை தாக்க வரும் எதிரிகளை பயமுறுத்த கடல் நீரை உள் இழுத்து பலூன் போன்று மாறி நீந்துகின்றன. இதை பார்க்கும் எதிரி மீன்கள் பயந்து ஓடி விடுமாம். தண்ணீரிலிருந்து வெளியே விட்டாலும் காற்றை இழுத்துக் கொண்டு பலூன் போன்று மாறும் தன்மை உடைய விசித்திர மீனாகும்.

கடல் கோழி மீன்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்