
-மூதூர் நிருபர்-
திருகோணமலை வீரநகர் பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதோடு, அப்பகுதி மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.
அவருடன் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் செயலாளர், கடல்வள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.
