
கடற்றொழில் மற்றும் நீரியல் வளர்ப்புத் துறையினரின் எரிபொருள் சிக்கல்களைத் தீர்க்க 24 மணிநேர அவசர சேவை!
கடற்றொழில் படகுகள், கடல் உணவுகளைப் பதப்படுத்துதல் மற்றும் நீரியல் வளர்ப்பு உள்ளிட்ட கைத்தொழில்களில் ஈடுபடுவோருக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, புதிய அவசர உதவி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சேவையானது 24 மணிநேரமும் (24X7) செயற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
011 4 323 389 எனும் இலக்கத்தின் ஊடாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் தாமதங்கள் அல்லது அது தொடர்பான ஏதேனும் முறைப்பாடுகளை, எந்நேரமும் முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
