கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஒக்டோபருக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில், கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவுசெய்ய விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அந்த நாட்டின் ஊடகமொன்றுக்கு நேற்று கருத்து வெளியிட்டபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம், பாதீட்டை முன்வைப்பதற்கு முன்னர் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள், கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய விரும்புவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதில் அனைவரும் இணைய வேண்டும் எனத் தாங்கள் முன்மொழிவதாக ஜனாதிபதி கூறியுள்ளதுடன், சீனாவும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் ஜப்பானிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்