கடனை திருப்பிக் கேட்டதால் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் தனக்கு உதவி செய்த நண்பனின் மனைவியை கழுத்தை நெறித்துக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே பாலக்கடவு பகுதியைச் சேர்ந்த சனல் என்பவரின் மனைவி ஆதிராவை கடந்த 29ம் தேதி முதல் காணவில்லை என கணவரும் உறவினர்களும் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்திருந்தனர். இந்தப் புகார் பதிவு செய்து காவல்துறையினர் ஆதிராவை தேடி வந்தனர். விசாரணையில் எந்த பிடியும் கிடைக்காததால் ஆதிராவின் செல்போனை ஆய்வு செய்ய பொலிசார் முடிவு செய்தனர். செல்போனை ஆய்வு செய்யும் போது, காணமல்போன நாளில் கடைசியாக ஆதிரா தனது கணவர் சனலின் நண்பரும், தன்னுடன் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்பவருமான அகில் என்பவருடன் பேசியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து பொலிசார் ஆதிராவின் வீட்டின் அருகில் இருப்பவர்களிடம் விசாரைணையை தீவிரப்படுத்தினர். அப்போது 29ம் தேதி ஆதிரா அகிலுடன் காரில் சென்றது தெரியவந்ததை. தொடர்ந்து அகிலை பிடிக்கும் பணியை பொலிசார் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் காலை அவர் பொலிசாரிடம் சிக்கினார். அதன் பின் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். ஆதிராவை தான் கொலை செய்ததாகவும்இ அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
கொலைக்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தினார்:
ஆதிராவும் அகிலும் அங்கமாலியில் இருக்கும் ஒரு பல்பொருள் அங்காடியில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது அகிலுக்கு பல முறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் ஆதிரா பணமாகவும் நகையாகவும் அகிலுக்கு கொடுத்து உதவியுள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தது எதுவும் திரும்ப தராததால் ஆதிரா கடனை திருப்பிக் கேட்டுள்ளார். கடனை திருப்பிக் கேட்டதால் ஆதிரா மீது அகிலுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 29ம் தேதி ஆதிராவுடன் தொலைபேசியில் பேசி காரில் வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.
அத்திரப்பள்ளி அருகே யாரும் இல்லாத இடத்திற்கு ஆதிராவை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துள்ளார். பின்னர் தான் பொலிசாரிடம் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் ஆதிராவின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டு யாருக்கும் தெரியாமல் சென்றிருக்கிறார். இந்த தகவல்களை அகில் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆதிராவின் உடலை மீட்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அகிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்