கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயிரிழக்கும் இந்தியாவின் தேசிய விலங்கு

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 202 புலிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 52 புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மத்திய பிரதேசத்தில் 47 புலிகளும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 26 புலிகளும், தமிழ்நாட்டில் 15 புலிகளும்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.