
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு விசாரணை!
மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால்ல் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்தவகையில் இன்றையதினம் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைத்துக் கொள்ளப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன்இ இன்று காலை கொழும்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
