கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளிநாட்டு பயணத் தடை!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மருதங்கேணி விளையாட்டு கழக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் பொலிஸார் விடுத்த வேண்டுகோளின் படி, அவர் பொலிஸில் வாக்குமூலம் வழங்கும் வரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அவருக்கு தற்காலிக வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்