கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்-

கோப்பாய் – கோண்டாவில் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 வயதுடைய சந்தேகநபர் இன்று புதன் கிழமை  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து ஒன்றரை லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.