ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான வெளியேற்றல் (Eliminator) போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

இதுவரையில் 257 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 55 அரைச் சதங்கள் உட்பட 4,842 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அத்துடன் இவர் விக்கெட் காப்பாளராக செயற்பட்ட காலத்தில் 145 பிடியெடுப்புகளை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்