ஓட்டமாவடியில் மின்னல் தாக்கி தென்னை சேதம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி-03 வட்டாரத்திலுள்ள வீடொன்றிலிருந்த தென்னை மீது மின்னல் தாக்கியதில் தென்னை தீப்பற்றியுள்ளது.
இன்று மாலை திடீரென ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது தென்னையின் மேற்பகுதி தீயில் கருகியுள்ளதுடன், மழை காரணமாக தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.இதனால் அப்பிரதேசத்தில் எந்தவித பாதிப்புக்களும் இல்லை.