ஒரே பாடசாலையை சேர்ந்த நான்கு மாணவர்கள் மாயம்
நோர்வுட் – வெஞ்சர் பகுதியைச் சேர்ந்த 4 பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.
சென் ஜோன் டில்லரி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இதன்போத காணாமல் போயுள்ளனர்.
இது தொடர்பில் காணாமல் போன மாணவர்களின் பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தநிலையில், காணாமல் போன மாணவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
