ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை: ஒருவர் கைது

குருநாகல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி குருநாகல் நல்ல பகுதியில் 42 வயதுடைய நபரொருவரால் ஆண் (வயது – 80), அவரது மனைவி (வயது – 77) மற்றும் அவர்களது மகன் (வயது – 42) ஆகியோர் அவர்களது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குருநாகல் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்