
ஒரு வயது குழந்தை மீது காரை ஏற்றிய தாய்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை 13 மாத குழந்தை மீது தாய் தோன்பர்க் தெரியாமல் காரை ஏற்றி படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
சைரா (வயது – 13 மாதம்) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தோன்பர்க் இல்லத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்த இடம் மிக குறுகலாக காணப்பட்டுள்ளது. காரை அவர் பார்க்கிங் செய்தபோது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்றுள்ளது. இதில் பின்னால் இருந்த அவரது குழந்தை சைரா ரோஸ் மீது ஏறியதில் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெரியாமல் காரை ஏற்றி குழந்தையின் உயிரை பறித்த நிலையில் தாயார் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
