ஒரு கிலோ கொத்தமல்லி 1,900 ரூபாவிற்கு விற்பனை
நாட்டில் மரக்கறிகளின் விலை இன்று புதன்கிழமை அதிகரித்துள்ளது.
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று ஒரு கிலோகிராம் கரட் 125 முதல் 145 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் லீக்ஸ் 270 முதல் 290 ரூபாவாகவும், பீட்றூட் 320 முதல் 340 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 290 முதல் 310 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் கொத்தமல்லி 1,800 முதல் 1,900 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்