எல்ல பகுதியில் அமைந்துள்ள ஒன்பது வளைவுகள் கொண்ட பாலம், இரவில் மின் விளக்குகளால் ஒளிரும் வகையில் காட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதனைக் காண வந்த, பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளானதாக தெரியவந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையில், எல்ல பகுதியில் அமைந்துள்ள ஒன்பது வளைவுகள் கொண்ட இந்த பாலத்தில், மின் விளக்குகள் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஒரு சிறப்பு விளக்கு அமைப்பு கட்டப்பட்டு வருகிறது. மேலும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த காணொளி AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது ஆகும்.
காணொளியைப் பார்த்த சில உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இது உண்மையானது என்று நினைத்து அங்கு வருவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
எனவே அக்காணொளி AI என்றும் அதை உண்மை என நினைத்து இரவு நேரங்களில் அப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி