
ஒடிசாவில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மூன்று தொடருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகி, 36 மணிநேரம் கடந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
தண்டவாளத்தில் தடம்புரண்டிருந்த ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகளை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விரைவில் சீரமைப்பு பணிகளை முடிவுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
