ஐ.பி.எல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவிற்கு தடை
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தி்ல் லக்னோ அணியிடம் தோற்று இறுதி இடத்தைப் பிடித்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற குறித்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
இதேவேளை குறித்த போட்டியில் மும்பை அணி பந்து வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.
குறிப்பிட்ட நேரத்தில் மும்பை அணி பந்து வீசாத காரணத்தினால் மும்பை அணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியாவிற்கு 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் அவரது முதல் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹர்திக் பாண்டியாவிற்கு இந்திய மதிப்பில் 30 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்