
ஐவர் சிறைவாசம் அனுபவிக்க சாட்சி கூறியவர் சுட்டுக்கொலை : ஹப்புத்தளையில் பயங்கரம்
ஒருவர் சுட்டுக்கொலை! மேலும் ஒருவர் படுகாயம்! ஹப்புதளையில் பயங்கரம்!!
-பதுளை நிருபர்-
ஹப்புதளைஇ பெரகல வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்தவர் விடுதி உரிமையாளர் எனவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தின் பின்புலம் தொடர்பில் இன்னும் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பிலும் எதுவும் கண்டறியப்படவில்லை.
எனினும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் நீதிமன்ற வழக்கு ஒன்றின் சாட்சி எனவும் அவர் சாட்சி கூறியதள் பிரகாரம் ஐவர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின்பேரில் ஹபுத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
