
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார் அர்ஜுன ரணதுங்க
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்டுள்ளார்.
தலவாக்கலையில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டத்தின் போது அவர் இணைந்துக் கொண்டுள்ளார்.
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
