
ஐக்கிய மக்கள் சக்தியுடனான சிறுபான்மை கட்சிகளின் ஒப்பந்தம் சரிவராது: அப்துல்லா மஹ்ரூப்
-கிண்ணியா நிருபர்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சரும் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு இன்று செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில் அவரது கிண்ணியாவில் உள்ள பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்றது.
இவ் ஊடக சந்திப்பின் போது நாட்டில் நடாத்தப்பட்ட உள்ள இரு தேர்தல்கள் பற்றி கருத்து தெரிவித்தார். பொதுத் தேர்தலும் ஜனாதிபதி தேர்தலும் இவ் வருடத்துக்குள் நடத்துவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் தீர்மானிக்கும் விடயமாகும். ஜனாதிபதி தேர்தல் என்பது செப்டம்பர், ஒக்டோபர் க்கு இடையில் நடாத்தப்பட்டு புதிய ஜனாதிபதி யை தேர்வு செய்ய வேண்டும்.
மே 1 இல் இருந்து ஜூன் வரை தேசிய மட்டத்தில் பல முடிவுகளை தேர்தல் ரீதியாக மாற்றத்தை செலுத்தும் . சிறு பான்மை மக்கள் பல முறை ஏமாற்றபடுகிறார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மலையக முன்னணி , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் கடந்த கால ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் பொதுத் தேர்தல் வரை பல ஒத்துழைப்புக்களை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கியுள்ளது.
ஆனாலும் அந்த தலைமையோ கட்சியோ சரியாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. 55 இலட்சம் வாக்குகளை பெற்ற போது அதில் சிறு பான்மை சமூகத்தின் முக்கிய 3 கட்சிகளான மக்கள் காங்கிரஸ், மலையக முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் 25 இலட்சம் வாக்குகள் காணப்படுகிறது. ஜே. ஆர் காலத்தில் தமிழ் கட்சிகள் சரியான முடிவுகளை சிறுபான்மை சமூகத்தின் தேசிய நலன் கருதி முடிவுகளை எடுத்திருந்தனர். தற்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பில் முன்னெடுப்பது பற்றி எந்தவகையான தாக்கத்தை செலுத்தும் என்பது தெரியாது .
தேசிய அரசாங்கம் உருவாக்கத்தில் தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. பொதுத் தேர்தலின் பின்பே ஜனாதிபதி தேர்தல் மூலமாக தேசிய அரசை உருவாக்க முடியும் தனி ஒரு கட்சியால் ஆட்சியமைக்க முடியாது தற்போது இருக்கும் அரசாங்கத்தில் பொது ஜன பெர முனவினை சேர்ந்த கட்சிகளை கொண்ட பெரும்பான்மை அரசாங்கம் உள்ளது. இதனால் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது இதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியை சேர்ந்தவர்களும் அங்கு உள்ளனர். எனவே தான் ஐக்கிய மக்கள் சக்தியுடனான எந்த ஒப்பந்தத்தையும் செய்வதை தற்போது ஏற்க முடியாது என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
