இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 2023 ஒக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத் தமக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியிட்ட செய்தி தொடர்பாக, இஸ்ரேலின் ஹாரெட்ஸ்(Haaretz) நாளிதழுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஹாரெட்ஸ்(Haaretz) வெளியிட்ட தகவலின்படி, தாக்குதலுக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு அமீரக ஜனாதிபதி நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசி, ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் பெரிய தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.
எனினும், நெதன்யாகுவின் அலுவலகம் இந்தக் குற்றச்சாட்டை “முற்றிலும் பொய்யானது” என மறுத்துள்ளது. அமீரகமும் அந்த குறிப்பிட்ட தொலைபேசி உரையாடல் குறித்து நேரடியாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோவில்லை.










