-யாழ் நிருபர்-
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த, அதிசொகுசு பேருந்து, உழவு இயந்திரம் ஒன்றை மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து, இன்று புதன்கிழமை அதிகாலை ஏ-9 வீதி, மிருசுவில் பகுதியில் நிகழ்ந்தது.
காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்