ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளை : மூவர் கைது

புத்தளம் – மதுரங்குளி பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் வங்கியின், ஏ.டி.எம் (ATM) இயந்திரத்தில் இருந்து பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் 105 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டமை தொடர்பிலே, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 7ஆம் திகதி, இரவு குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.