ஏறாவூரில் வர்த்தகர் ஒருவர் கொலை

ஏறாவூர் மிச்நகர் – ஹிஸ்புல்லாஹ் நகரில் நேற்று இரவு வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் வர்த்தக நிலையத்தை கொள்ளையடிக்க வந்த நிலையில் அதனை கடை உரிமையாளர் தடுத்த போது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் தாவூத் ( வயது 45 ) என்பவர் தலைப் பகுதியில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளிகள் கொலை செய்து விட்டு அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா சாதனங்களை எடுத்துச் சென்றுள்ளமை பொலிஸாரின் மேலதிக விசாரணைகளைகளின் போது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஏறாவூர் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்