
மட்டு.புனித மிக்கேல் கல்லூரி மாணவர்களின் சாதனை
மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான புனித மிக்கேல் கல்லூரி நேற்று திங்கட்கிழமை வெளியான கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின்படி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது.
அதன் படி கணித பிரிவில் 1, 3, 11, 12, 19, 21, 24, 28, 30, 39, 43, 53, 56, 67 இடங்களையும் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 1, 7, 11, 14, 18, 22, 65 ஆகிய இடங்களையும் வணிகப்பிரிவில் 10 மற்றும் 68 ஆகிய இடங்களையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

