எரிவாயு விலை இன்னும் சில தினங்களில் குறையும்: சாகல ரத்னாயக்க

எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலக பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்னாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

எரிபொருள் விலை குறைந்துள்ளதால், அடுத்த சில நாட்களில் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புகிறோம்’ என மேலும் அவர் தெரிவித்தார்.

பணவீக்கம் 70 வீதத்திலிருந்து 35 வீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்