எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் தீ விபத்து : 5 பேர் உயிரிழப்பு
இந்தியா – ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 37 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை எரிவாயு நிரப்பு நிலையத்திற்கு இரசாயனம் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மற்றுமொரு வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இதன்போது கனரக வாகனங்கள் உட்பட சுமார் 30 வாகனங்கள் தீயில் கருகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் 37 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து ஜெய்ப்பூர் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்