எரிபொருள் விலையில் மாற்றம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 328 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 365 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 308 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 346 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 236 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்