எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் போராட்டம்

-நுவரெலியா நிருபர்-

நுவரெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் பொது மக்களும், சாரதிகளும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

வாகனத்திற்கு தேவையான எரிபொருள் பெறுவதற்கு சாரதிகளும், மண்ணெண்ணெய் பெறுவதற்கு பொது மக்களும் இன்று காலை முதல் எரிபொருள் நிலையத்தை சூழ காத்திருந்தனர்.

எனினும், எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வாகன சாரதிகளும், மக்களும் எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் உள்ள சுற்றுவட்டத்தை மறைத்து சுமார் ஒரு மணித்தியாலயம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் கடும் பிரேயத்தனத்திற்கு மத்தியில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்படி, எரிபொருள் வாங்குவதற்காக கொள்கலன்கள் எடுத்து வந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாவுக்கும், வாகனங்களுக்கு 3500 ரூபாவும் டீசல் வழங்கப்பட்டது.

அதேபோல பொது மக்களுக்கு மாலை 6.00 மணிக்கு பிறகு மண்ணெண்ணெய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172