எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்கேற்கும் முன்னாள் ஜனாதிபதி

எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கவுள்ளார் .

தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெற கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார் .

இந்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கமாட்டார் என நாமல் ராஜபக்‌ஷ முன்னர் தெரிவித்திருந்தார் .