எங்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி – நீதி கேட்கும் கனகர் கிராம மக்கள்

அம்பாறை பொத்துவில் கனகர் கிராம மக்கள் தங்களது காணிகளில் மீள்குடியேறுவதில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து தெரிவிக்க எமது மின்னல் 24 செய்திகள் கலையகத்திற்கு வருகை தந்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்று பொத்துவில் பிரதேசத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் தமது காணிகளை விற்று ஊழல் செய்வதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.