ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
உள்ளூராட்சி மன்றங்களில் சாதாரண மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சகல தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இதுவரையில் நாடு முழுவதும் உள்ளூராட்சி மன்றங்களில் 8,000 பேர் இவ்வாறு தொழிலாற்றி வருவதாகவும் ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதற்கான யோசனை பிரதமர் தினேஷ் குணவர்தணவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்