
நாட்டில் அழுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை, நெல்லியடி போன்ற பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
அவசரத் தேவைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்ற முச்சக்கர வண்டிகள் கூட எரிபொருள் நிரப்புவதற்கு முடியாதநிலை காணப்பட்டதுடன், மருத்துவமனை உட்பட அத்தியாவசிய சேவைகளுக்கு கூட மக்கள் சென்று வர முடியாத அவல நிலையை அவதானிக்க முடிந்தது.
பருத்தித்துறை நகரில் கழிவகற்றல் மேற்கொள்ளப்படாத பல இடங்களிலும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது
ஆங்காங்கே பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
