உலக முடிவைக் பார்வையிடசென்ற வைத்தியர்கள் குழு மரம் முறிந்து விபத்து
நேற்று சனிக்கிழமை மாலை மடோல்சிம. பிட்டமாறுவ எலமான் பகுதியில் அமைந்துள்ள உலக முடிவைக் பார்வையிடுவதற்காக வைத்தியர்கள் குழுவொன்று பயணித்த கார் மீது மரக்கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததில் வைத்தியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடோல்சிம பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த வைத்தியர் றாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் 38 வயதுடைய வைத்தியர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக 08 நண்பர்களுடன் வைத்தியர்கள் நேற்று மாலை இரண்டு கார்களில் உலக முடிவை காணச் சென்று கொண்டிருந்த போது மடோல்சிம கொக்கல பிரதேசத்தில் வீதிக்கு அருகாமையில் இருந்த மரக்கிளை ஒன்று கார் மீது முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த வைத்தியரை மெட்டிக்காத்தன்ன கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக மடுல்சிம பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை மடுல்சிம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்