
உலக சாதனைக்காகவும் தியாகிகளை நினைவு கூருவதற்காகவும் நடை பயணம்
-யாழ் நிருபர்-
உலக சாதனை நிகழ்த்துவதற்காகவும், நாட்டில் இறந்த தியாகிகளை நினைவு கூருவதற்காகவும், இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களையும், 3089 கிலோமீற்றர் நடை பயணம் மூலம் கடந்து செல்வதற்காக நபரொருவர் ஆரம்பித்துள்ளார்.
காலி அக்குரஸ்ஸ பஸ் நிலைத்திலிருந்து கடந்த 2023/09/25 அன்று காலை 07.30 மணியளவில் காலி பரத்துவ வ்ததய, அக்குரஸ்ச, எனும் பிரதேசத்தை சேர்ந்த சுப்பிரமணியன் பாலகுமார் என்பவர் ஆரம்பித்த நடை பயணம் 22/10/2023 காங்கேசன்துறையை வந்தடைந்தது.
பின்னர் அங்கிருந்து நேற்று திங்கட்கிழமை கரையோரமாக வல்வெட்டித்துறை பருத்தித்துறை ஊடாக நடை பயணத்தை தொடர்ந்து பருத்தித்துறை கொடிகாமம் வரை நடை பயணத்தை தொடர்கிறார்.
