உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கம் விலை  பணவீக்கத்திற்கு எதிராக மீண்டும் உயர்வடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலரின் மதிப்பானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

திரவத் தங்கம் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.