உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் அரபு நாடான சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

கிங் சல்மான் எனும் குறித்த சர்வதேச விமான நிலையம் மூலம் 150,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விமான நிலையத்தில் 57 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவு கொண்ட ஆறு ஓடுபாதைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் 2030 ஆண்டு இந்த விமான நிலையம் திறக்கப்படுமாயின் 12 கோடி பயணிகள் பயணம் செய்ய ஏற்ற வசதிகள் காணப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்