Last updated on May 6th, 2023 at 01:14 pm

உலகின் விசித்திரமான மரங்கள்

உலகின் விசித்திரமான மரங்கள்

உலகின் விசித்திரமான மரங்கள்

மரம் மனிதனுக்கு பயன் தரும். வெயில் வாட்டும் போது நிழல் தரும். பூக்கும் காய்க்கும் என்பதைத் தாண்டி சில மரங்கள் தோற்றத்திலோ நிறத்திலோ குணத்திலோ மற்ற மரங்களை விட தனித்துவமாக இருக்கும். அப்படியான உலகின் மூலைகளில் உள்ள தனித்துவ , விசித்திர மரங்களை பற்றிய தொகுப்பு

உலகின் விசித்திரமான மரங்கள்

இந்த மரம் 72 அடி உயரமும் 155 அடி சுற்றளவும் கொண்ட தென்னாப்பிரிக்காவின் மொட்ஜாட்ஜிஸ்க்லூஃப் என்ற இடத்தில் அமைந்துள்ள சன்லேண்ட் போப் -Sunland Boab மரம், உலகின் மிகவும் வினோத மரங்களில் ஒன்றாகும். இயற்கையாகவே உள்ளே வெற்றிடம் கொண்ட இந்த மரத்தின் உ ட்பகுதியில் 1933ல் ஒரு சிறிய பட்டி அமைக்கப்பட்டது. இதில் இப்பொது 60 பேர் வரை தங்கலாம். தென்னாப்பிரிக்காவின் மிக உயரமான மற்றும் அகலமான பாப், மரம் 6,000 ஆண்டுகளுக்கு முந்தையது,

உலகின் விசித்திரமான மரங்கள்

உலகிலே மிகப்பெரிய மரங்களுக்குப் பெயர் பெற்ற சீக்வோயாக்கள் sequoias சராசரியாக 150 முதல் 280 அடி உயரம் வரை வளரும், தண்டு விட்டம் 16 முதல் 23 அடி வரை இருக்கும். கலிபோர்னியாவின் சீக்வோயா தேசிய பூங்காவில் உள்ள மரம், இதுவரை அறியப்பட்ட மிகப் பழமையான சீக்வோயா மரமாகும். இது சுமார் 3,200 ஆண்டுகள் பழமையானது.

உலகின் விசித்திரமான மரங்கள்

வடமேற்கு ஆபிரிக்காவின் கேனரி தீவுகளில், டெனெரிஃப் தீவில், ஒரு டிராகன் இறந்தவுடன், அது மரமாக மாறுகிறது என்று உள்ளூர் புராணக்கதை கூறுகிறது. 50 அடி உயரத்தில் நிற்கும், குடைபோல இருக்கும் டிராகன் இரத்த மரத்தை dragon’s blood tree  வெட்டினால் ரத்தம் போல சிவப்பு நிற திரவம் வெளிவரும். இது பல நூற்றாண்டுகளாக தீவின் குவாஞ்சே மக்களால் மம்மிஃபிகேஷன் செயல்முறைக்கு பயன்படுத்தப்பட்டது.

நமீபியாவில் அமைந்துள்ள, பூமியில் மிகவும் கொடிய மரங்களில் ஒன்றாக விவரிக்கப்படும், பாட்டில் மரங்கள் வெளியில் தெரியும் அதன் தோற்றத்தில் இருந்து அதன் பெயரை பெற்றன. ஆனால் மரத்தில் இருந்து கிடைக்கும் பால் மிகவும் நச்சுத்தன்மையுடையது. இதை ஒரு காலத்தில் வேட்டையின் போது அன்பில் தடவும் விஷமாக பயன்படுத்தியுள்ளனர்.

டிரான்ஸ்-மெக்சிகன் எரிமலை பெல்ட்டின் காடுகளில் வளரும் ஓயமல் ஃபிர் oyamel fir கசை மரங்கள் 8,000 முதல் 11,000 அடி உயரத்தில் வளரும். புனித ஃபிர்ஸ் என்று பொதுவாக அறியப்படும் இந்த மரங்கள், மோனார்க் பட்டாம்பூச்சிகளின் காலனிகளுக்கு இருப்பிடமாக அமைகின்றன. அவை ஓயாமெல் காடு முழுவதும் உள்ள மரத்தின் தண்டுகள் மற்றும் கிளைகளை பிரகாசமான-ஆரஞ்சு மற்றும் கருப்பு-முனை இறக்கைகளால் மூடுகின்றன.

பிலிப்பைன்ஸைப் பூர்வீகமாகக் கொண்ட ரெயின்போ யூகலிப்டஸ் மரம்இ அதன் பல வண்ண அடுக்கு பட்டைகளால் அறியப்படுகிறது. சாதாரணமாக கருஞ்சிவப்பில் காணப்படும் மரப்படைகளுக்கு பதிலாக இதன் பட்டைகள் பச்சை – நீலம் – ஊதா – ஒரேஞ் மற்றும் இறுதியாக பழுப்பு நிறத்தில் காணப்படும். பல வண்ணங்களில் இருக்கும் இந்த மரம் காகித உற்பத்திக்காக பயிரிடப்படுகிறது.

போலந்தின் க்ரிஃபினோ நகருக்கு அருகில் உள்ள நோவ் சர்னோவோ கிராமத்தில் 400 வித்தியாசமான வளைந்த வடிவ மரங்கள் நிறைந்த காடு ஒன்று உள்ளது. ஒவ்வொரு மரமும் தண்டின் அடிப்பகுதியில் வடக்கு நோக்கி கூர்மையாக வளைந்து, பின் சாதாரண மரம் போல் நேராக வளருகிறது. இதற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெஸ்ட் டெர்பி நகருக்கு அருகே இ ஒரு பெரிய போப் மரம் Boab prison tree  அமர்ந்திருக்கிறது, அது ஒரு சிறிய சிறைச்சாலை அறை போல வெட்டப்பட்டது. 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த மரத்தை முன்னொரு காலத்தில் கைதிகள் தண்டனை சிறைக்கு செல்லும் முன்னர் ஒரு இரவு தங்கவைக்கும் இடமாக இதை பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்