உலகின் முதல்நிலை சதுரங்க வீரரை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நோர்வே சதுரங்கப் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டம் நேற்று புதன் கிழமை  இடம்பெற்றது.

இதில் உலகின் முதல்நிலை சதுரங்க வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா உலக சதுரங்க செம்பியன்ஷிப் தொடரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு உலக சதுரங்க செம்பியன்ஷிப் தொடரில் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியடைந்த பிரக்ஞானந்தாவிற்கு இது ஒரு சிறந்த வெற்றியாக அமைந்துள்ளது.

இதன்மூலம் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய நான்காவது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்