
உலகின் மிக நீளமான ஓவியம் : கின்னஸ் சாதனை படைத்த பெண்
சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர், சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
ஆயிரத்து 14 மீட்டர் நீளமுள்ள ஓவியத்தை, கேன்வாஸில் ‘காலப்போக்கில் நாகரிகத்தின் வளர்ச்சி’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு அவர் இந்த ஓவியத்தை வரைந்துள்ளார்.
சீனப் பெருஞ்சுவரின் மேல் 60 நாட்களுக்கும் மேலாக அமர்ந்து இந்த பிரமிக்க வைக்கும் ஓவியத்தை குவோ ஃபெங் வரைந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
