உலகப் புகழ்பெற்ற ஆடை பிராண்டுகள் என்ற போர்வையில் மோசடி!

உலகப் புகழ்பெற்ற ஆடை பிராண்டுகள் என்ற போர்வையில் தரம் குறைந்த ஆடைகளை விற்பனை செய்யும் ஆடை கடையொன்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை கடையொன்றில் உலக புகழ்பெற்ற பிராண்டுகளின் ஸ்டிக்கர்கள், பெயர்கள் பொறிக்கப்பட்டு போலியான ஆடைகள்  கடை உரிமையாளர்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகர்களுக்கு விநியோகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த கடைக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்