உருவ பொம்மையை எரித்து, மொட்டையடித்து கதறியழுது ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்-

கடந்த 5 நாட்களாக பசறை எரிபொருள் நிலையங்களுக்கு டீசல் விநியோகிக்கப்படவில்லை. இதனை கண்டித்து பசறை நகர் வாகன சாரதிகள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது பசறை-பிட்டமாறுவ வீதி, பசறை-செங்கலடி வீதி, பசறை-கல்வத்த வீதி ஆகிய வீதிகளை மறித்து இப்பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உருவ பொம்மை வீதியில் எரிக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து நபரொருவர் மொட்டை அடித்து இறுதிக்கிரியை நிகழ்வு நடாத்தினார்

மேலும், டயர்கள் வீதியில் வீசப்பட்டு எரிக்கப்பட்டமையால் அனைத்து வீதிகளிலும் பாரிய வாகன நெருக்கடி நிலவுகின்றது.