உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள ஆட்களற்ற காணியில் இன்றையதினம் திங்கட்கிழமை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட ஆண் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்