
“உயிரோடு நானாக” நூல் அறிமுக விழா
-மட்டக்களப்பு நிருபர்-
கதிர். திருச்செல்வம் எழுதிய ‘உயிரோடு நானாக’ நூல் அறிமுக விழா ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருமதி சுதாகரி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரும், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளருமான எந்திரி நடராசா சிவலிங்கமும், சிறப்பு உரையாளராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் பசீர் சேகுதாவூத் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்நூலுக்கான அறிமுக உரையினை மகுடம் பதிப்பக நிறுவுனர் வி.மைக்கல் கொலினும், நூல் மதிப்பீட்டு உரையினை கலை, இலக்கியச் செயற்பாட்டாளரும், நூல் விமர்சகருமான திருஞானசம்பந்தன் லலிதகோபனும் நிகழ்த்தினர்.
இங்கு வெளியீடு செய்யப்பட்ட நூலின் முதல் பிரதியினை திருகோணமலை நீர் வடிகாலமைப்புச் சபை பிரதம பொறியியலாளர் எந்திரி அமலதாஸ் வசந்தராஜ் பெற்றுக் கொண்டார்.
