உயிரிழந்த பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டு போட்டு பாதுகாப்பு

பாகிஸ்தானில் உயிரிழந்த பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டு போட்டு பாதுகாப்பதாக, சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

The curse of god why I left islam எனும் புத்தகத்தின் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஹரிஸ் சுல்தான் தன்னுடைய  டுவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும்  உயிரிழந்த பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டு போட்டு பாதுகாக்கும் நிலை இருப்பதாக தெரிவித்து சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

மேலும், பாகிஸ்தான் கலாசாரத்தை கண்டிக்கும் வகையில் புர்காவுடன் தொடர்புபடுத்தி தன் கண்டன கருத்தை அவர் பதிவிட்டிருந்தார்.

 

செய்தி நிறுவனங்கள், பத்திரிக்கை வழிமுறைகளை சரியாக பின்பற்றாமல் செய்திகளை அடிப்படை ஆதாரமின்றி வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டதாக சொல்லும் பெற்றோர்களிடம் பேசாமல்  உண்மை தன்மை கண்டறிய எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் இட்டுக்கட்டிய தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருப்பதாகவும் ஹரிஸ் சுல்தான் கூறியுள்ளார்.

ஹரிஸ் சுல்தானின் டுவிட்டர் பதிவு

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்