
உயர் அழுத்த மின் வடத்தில் மோதுண்ட இரதம்: சாரதிக்கு விளக்கமறியல்
பதுளை – நமுனுகுல – பூட்டாவத்தை பகுதியில் உயர் அழுத்த மின் வடத்தில் மோதுண்ட இரதத்தை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்தின் சாரதியை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பசறை – அம்பத்தனை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய சாரதியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
உழவு இயந்திரத்தின் சாரதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பூட்டாவத்தை பகுதியில் இரதம் ஒன்று நேற்று முன் தினம் வியாழக்கிழமை உயர் அழுத்த மின் வடத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இரண்டு ஆண்கள் உயிரிழந்ததுடன் மூன்று பேர் காயமடைந்தனர்.
