உயர்வடையும் வெப்பநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்கும் என கூறப்படுகின்றது.
இதன் காரணமாக சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, வறட்சியான காலநிலையைக் கருத்தில் கொண்டு விவசாய நடவடிக்கைளுக்காக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி விவசாயிகளை கோரியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்