
உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவன் திடீரென உயிரிழப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தர கணிதப் பிரிவில் அதிகூடிய சித்தியடைந்த குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் ஒருவர், பெறுபேறுகள் கிடைத்த இரண்டு நாட்களில் இதய நோயினால் திடீரென உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோராய ரணவன பிரதேசத்தை சேர்ந்த ஆர்.ஜி.மனுஜய ஹன்ஸ்மல் (19 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் நேற்று வியாழக்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞன் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் இரண்டாவது தடவையாக தோற்றியிருந்ததோடு, அண்மையில் வெளியான பரீட்சை பெறுபேறுகளின்படி அவர் மூன்று B சித்திகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
