உயர்தரப் பரீட்சை தாள்கள் வெளியாகியுள்ளன: இரத்து செய்யப்பட்ட பாடம்

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.

விவசாய விஞ்ஞான பாட பரீட்சைத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று வியாழக்கிழமை வெளியானதையடுத்து, குறித்த பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இரத்து செய்யப்பட்ட பரீட்சை மீண்டும் நடத்தப்படும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்